வெள்ளி, 2 அக்டோபர், 2015

பெண்ணே! தடைகளைத் தகர்த்து, விடைகளைக் காண்.



          (வகை-(3) பெண்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரைப்போட்டி)

                      “வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளுக்காக எழுதப்பட்ட கட்டுரை. 

முதலில்....
 “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் 
 அறிவில் ஓங்கியிவ் வையம் தழைக்குமாம்”..
.என்று பாடிக் களித்தான் பாரதி. சாதிகளில் ஆகத் தாழ்ந்த சாதியாகச் சமூகம் கருதுவது ‘பெண் சாதி’யைத்தான். ஆதிகாலம் தொட்டு அண்மைக்காலம் வரை பெண்கள சக உயிராகக்கூடக் கருதப்படவில்லை என்பதை நினைத்தால் நெஞ்சம் கனக்கிறது. பலருக்குப் பெண் என்பவள் ஒரு நுகர்வுப் பொருளே!? பெண்களின் நேற்றைய நிலைப்பாட்டை, இன்றைய இடர்ப்பாட்டை, நாளைய செயல்பாட்டைப் பேச முனைகிறது இந்தக் கட்டுரை.