புதன், 30 செப்டம்பர், 2015

விரைந்து பாயும் விண்கலம் நீ!

வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி போட்டிக்கு எழுதப்பட்ட கவிதை -

                 விரைந்து பாயும் விண்கலம் நீ!

குட்டிவிதை முட்டியெழும் மண்ணைக் கீறி! 
குருவிகளும் கூடுகட்டும் மரத்தின் மீதில்!
பட்டுவிட்ட தாவரமும் தளிர்க்கும் மண்ணில்!
              படர்ந்திடவோர் கொழுகொம்பு கொடிகள் தேடும்!
 கட்டுடைத்த தண்ணீரும் வேக மாகக்                 
காட்டாற்று வெள்ளம்போல் சீறிப் பாயும்!
தொட்டவுடன் சுருங்கநீயும் சிணுங்கி யல்ல!   
                    தொடர்ந்துவரும் தோல்விகண்டு துவண்டி டாதே!


மொட்டுவிட்ட மல்லிகைபோல் மணந்து வீசு!
மோகமது வந்துமுட்டும் மயங்கி டாதே!
கட்டுக்குள் ஓடுகின்ற காளை யல்ல!                     
கைகளுக்குள் உலகமதை வென்று காட்டு!
விட்டிலல்ல வீழ்ந்துபோக விளக்கில் வீழ்ந்து  !
விண்ணதிர விரைந்துபாயும் விண்க லம்நீ!
சிட்டெனவே பறந்துசென்று வெற்றி பெற்றுச்      
சிறப்புடனே வாழ்ந்துகாட்டு சிகரம் தொட்டு!


படிக்கட்டில் நீதொங்கிப் பயணம் செய்தால்       
பழுதற்ற வீரனென்று யார்தான் சொல்வார்?
துடிக்கின்ற நாடிபோன்ற மொழிய தற்குத்         
துன்பமது துயரமது வந்து விட்டால்          
துடிக்கட்டும் உனதுபுயம் எழுச்சி கொண்டு!     
தூங்காமல் பணியாற்று அதுதான் வீரம்!   
                 வெடிக்கட்டும் புதுப்புரட்சி மீண்டும் உன்னால்!                
               விலகட்டும் தடைகளெல்லாம் தகர்ந்து பின்னால்!


(எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

 உறுதிமொழி:
இந்த  படைப்பு தமது சொந்தப் படைப்பே என்றும், இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்றும், “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்றும் உறுதி மொழி என்னால் வழங்கப்படுகிறது. 
                                                             - மகா சுந்தர்

22 கருத்துகள்:

 1. அன்பினிய மகா.சுந்தர் அவர்களுக்கு வணக்கம்.
  தங்கள் படைப்பை நமது தளத்தில்,
  “போட்டிக்கு வந்த படைப்புகள்“ பகுதியில் இணைத்திருக்கிறோம்.

  பார்க்க - http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html
  வகை – (5 )

  மற்ற தலைப்புகளிலும் தாங்கள் பங்குபெற்று
  இன்னும் பல படைப்புகளை எழுதி
  இன்று இரவுக்குள் அனுப்பலாமே?

  நன்றி வணக்கம்.
  அன்புடன்,
  நா.முத்துநிலவன்,
  ஒருங்கிணைப்பாளர்-விழாக்குழு,
  கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை

  பதிலளிநீக்கு
 2. வெடிக்கும் புதுப்புரட்சி விரைவில்
  விலகும் பெருந்தடைகள் நுரைபோல்.
  உணர்வினைத் தூண்டும் கவிதை. போட்டியில் வென்றிட வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் திருவிழா எதைச் சாதித்தது என்று யாரவது கேட்பார்கள் எனில் அவர்களுக்கு உங்கள் கவிதையைக் கொடுப்பேன் நான்.
  நன்றி வழக்கம்போலே நிலவன் அண்ணாத்தேவிற்கு

  பதிலளிநீக்கு
 5. விட்டிலல்ல வீழ்ந்துபோக விளக்கில் வீழ்ந்து !
  விண்ணதிர விரைந்துபாயும் விண்க லம்நீ!
  ---- பேச்சிலும், எழுத்திலும் முத்திரை பதித்துவரும் நண்பர் மகா.சுந்தர் அவர்கள் வெற்றிபெற வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 6. ஆஹா அருமையான வரிகள்
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. அருமையான எழிலார் கவிதை.

  இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?,

  வாழ்த்துகள் ஐயா.

  நன்றி

  பதிலளிநீக்கு
 8. வெற்றி பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 9. போட்டியில் இரண்டாமிடம் பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. வெற்றி பெற்றமைக்கு புதுகை பதிவர் விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. வலைப்பதிவர் சந்திப்பு போட்டியில் வெற்றி பெற்ற உங்களுக்கு எனது மனமார்ந்தவாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. அண்ணா! வெற்றிபெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா!

  பதிலளிநீக்கு
 13. வணக்கம். போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. த.இ.க.கழகத்தோடு புதுக்கோட்டை கணினித் தமிழ்சங்கம் நடத்திய மின்-தமிழ் இலக்கிய மரபுக் கவிதைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. அன்புள்ள அய்யா,

  இரண்டாம் பரிசு பெற்றதற்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 16. அன்புள்ள அய்யா,

  இரண்டாம் பரிசு பெற்றதற்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வெற்றி பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...