செவ்வாய், 3 ஜூன், 2014

இது கவிதை அல்ல..!

கவிஞர்.குருநாதசுந்தரனாரின் 'நாளையும் நானும்'            கல்விக்கவிதையைப் படித்ததால் ஏற்பட்ட விளைவு......
                   (http://gurunathans.blogspot.in/)

               எந்திரங்களாய்.... 

              (கவிஞர்கள் பொறுத்தருள்க!)

  

இனி
நாம்
இதயமில்லா
எந்திரங்களாய்  
இயங்குவதற்குத்
தயாராவோம்.
உயிர்ப்புள்ள
ரோஜாக்களைப் 
பதியம்போடுவதாய்     
நினைத்து
தொட்டிக்குள் திணித்து
தோட்டத்துச் செடியாக்குவோம்
இதயம் மறந்து
மூளைகளை மட்டும்
முதன்மைப் படுத்துவோம்  
இனி நம் கண்களுக்கு 
எண்ணிக்கை மட்டுமே 
எளிதாய்த் தெரியும் 
அடக்குவோம்,அடங்குவோம்
சுவடிகளுக்குள்ளும் புத்தகங்களிலும் 
புதைந்து போவோம் 
தேர்வுகளைச் சொல்லியே 
தினமும் மிரட்டுவோம்
மருத்துவர்களை,பொறியாளர்களை உருவாக்குவதே
மகத்தான பணியென 
மார்தட்டுவோம்.....
இந்நிலை மாற இனியேனும் முயற்சிப்போம் 
மதிப்பெண்களைத் தாண்டி
மனிதம் வளர்ப்போம்.....

 

17 கருத்துகள்:

  1. அய்யா
    வணக்கம். மனிதம் வளர்க்கும் தங்களின் புனிதப் பணி செம்மையுற வாழ்த்துக்கள்!
    நல்ல கவிதையின் பாதிப்பில் பிறந்த நல்ல கவிதை!
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா நன்றி! இது 'கவிதை' என்றதற்கு மீண்டும் நன்றி! தமிழாய்ந்த தங்களின் வருகையும் வாழ்த்தும் எனக்குப் பேருவகை! தொடர்ந்து சந்திப்போம்..

      நீக்கு
  2. மதிப்பெண்களைத் தாண்டி மனிதம் வளர்ப்போம் என்னும் தொடர் அருமை ஐயா.... தொடருங்கள் உங்களின் கவிப் பயணத்தை... அப்படியே எனது வலைப் பக்கத்திற்கும் வாருங்கள் உங்கள் கருத்தைத் தாருங்கள் www.ilakkanatheral.blogspot.in

    பதிலளிநீக்கு
  3. மதிப்பெண்களைத் தாண்டிய மனிதம் வளர்ப்போம்
    அருமையான வரிகள் ஐயா
    நிச்சயம் மனிதம் வளர்ப்போம்

    பதிலளிநீக்கு
  4. அய்யா புலவரே! நீர் கவிஞர் தானய்யா. கவிஞரேதான். சத்தியமாய் ஒப்புக்கொள்கிறோம். அது சரி நல்லா எழுதிய கவிதையின் கடைசி 3வரியில் அது என்ன ஒப்புதல் வாக்குமூலம்? உங்கள் கவிதையை நம்பும் நீங்கள் உங்கள் வாசகரையும் நம்ப வேண்டும். எங்கே தவறாகப் புரிந்துகொள்வார்களோ என்ற சந்தேகத்தில்தானே அந்த 3வரிகள்? அந்த இடம்தான் திருத்தப்பட வேண்டும். வாசகரை நம்பும் படைப்பாளிதான் வெற்றிபெறுவான். வெற்றியை நெருங்கி வந்ததற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா! "வெற்றியை நோக்கி வந்ததற்கு வாழ்த்துகள்" ...இந்த வரிகள் எனக்கு நம்பிக்கையைத் தருகிறது. இனி உங்கள் வாழ்த்துகளுடன் தொடர்ந்து பயணிப்பேன்.

      நீக்கு
  5. நீங்க சொன்னாலும் நம்பமாட்டோம். இது கவிதையே தான்.
    ஒவ்வொரு வரியும் நச்..நச்..
    ஆனால் நான் நினைத்து எப்படி கூறுவது என குழம்பிய விஷயத்தை
    அண்ணா சொல்லிவிட்டார்.பொருத்தமான படங்கள். அப்புறம் நீண்ட விடுப்புக்கு பின் இப்போ தான் வலைபூ பக்கம் வந்தேன் அண்ணா. உங்களை இங்க பார்க்கிறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. உங்கள் ஆழ்ந்த வாசிப்பும், அருமையான பேச்சாற்றலும் இனி எங்களை போன்றோருக்கு மிகவும் பயன்படும். வாழ்த்துக்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கையின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி அளிக்கிறது.தங்களின் கருத்து நேரில் பேசுவதுபோலவே இருக்கிறது.நன்றிம்மா..!தொடர்ந்து சந்திப்போம்.

      நீக்கு
  6. வணக்கம் ஐயா
    நேரடியாக சொல்லாமல் எதிர்மறையாய் சொல்லி தன் நிலையை உணர வைப்பது ஒரு உத்தி. அது இங்கு மிக அழகாக கையாளப்பட்டுள்ளது. கவிஞர்களே தங்கள் கவிதையைக் கவிதை என்று ஒற்றுக் கொண்டு விட்டார்கள். அப்புறம் என்னங்க ஐயா தொடர்ந்து எழுதுங்கள் விரைவில் இன்னொரு கவிதையை எதிர்பார்க்கிறோம். உண்மையில் நல்லதொரு கவிவரிகள். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா! வலையுலக இளவரசராக வெற்றி வாகை சூடிக்கொண்டிருக்கிற தங்களுக்கும் வாழ்த்துகள்..!என் கவிதை முயற்சிகள் தொடரும்.! நன்றி!

      நீக்கு
  7. மிக அழகாக கூறியுள்ளீர்.வலைத்தளமும் நேர்த்தியாக உள்ளது சார்.தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. பெரியவர் சொல்லிவிட்டார்
    அதை நான் வழிமொழிகிறேன்..
    திடீர் என நோஸ் டைவ் அடிக்கும் ப்ளேன் மாதிரி
    எதார்த்தை சொல்லிவந்த கவிதை
    கனவு முடிவில் முடிவது
    ஒரு எதிர்பாரா அதிர்ச்சி..
    அருமை அண்ணா தொடர்க
    http://www.malartharu.org/2014/05/inyath-thamil-payirchip-pattarai-2014.html

    பதிலளிநீக்கு
  9. நன்றி.! இது கவிதைக்கான முயற்சி தான்..! இனியும் முயற்சிகள் தொடரும்.

    பதிலளிநீக்கு
  10. தவறு நண்பரே, இது கவிதை அல்ல என தலைப்பு கொடுத்தது தவறே... இதை வன்மையாக கண்டிக்கிறேன், தங்களின் கவிதையின்பால் ஈர்த்து தொடர முடிவெடுத்துள்ளேன், நன்றி
    KILLERGEE
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


    அறிமுகப்படுத்தியவர்-மகிழ்நிறை மைத்திலி கஸ்தூரிரெங்கன்


    பார்வையிட முகவரி-வலைச்சரம்


    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:
    என்பக்கம் கவிதையாக

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...