ரௌத்திரம் பழகு!!!!!
நகரத்தார் அரங்கினில்
அகரத்தை நம் அன்னை
மொழி அதனைச்
சிகரத்தில் ஏற்றி
வைத்த செந்தமிழன் பாரதிக்கு
என் சிரம் தாழ்ந்த
வணக்கங்கள்...
கவிராசன் கழகமதில்
கவியரங்கம் கேட்க
செவியோடு
வந்திருக்கும்
செந்தமிழ்ப்
பாவலர்காள்
அனைவருக்கும் என்
வணக்கம்!!
துருப்பிடித்த
உவமைகளால் மங்கிப்போன
தூர்ந்துவிட்ட கற்பனையால் துவண்டு போன
இருளடைந்த
இலக்கியத்தைச் சாணை தீட்டி
இருந்தமிழைச் சீர்செய்தான் இனிமை கூட்டி
நெருப்பினிலே
சொல்லேடுத்தான் தமிழும் ஆள!
நேர்மை எனும் வில்லேடுத்தான் பகைமை மாள
அரும்பல்ல அவன்கவிதை வலிமை
கூட்டி
ஆதிக்கத்தின் அடிவேரில் பாயும் ஈட்டி !