வியாழன், 31 டிசம்பர், 2015

வடம் பிடிப்போம்! வள்ளுவத் தேரை!              வடம்பிடிப்போம்!வள்ளுவத் தேரை!                  ஓர்நாட்டு மாந்தருக்காய்ப் பாட வில்லை!
                           உலகத்தின் உயர்வுக்காய் எண்ணிச் செய்தான்!
                  கார்பொழியும் மேகமென காற்றைப் போல
                           காலமது உள்ளமட்டும் மனிதம் வாழ!
                   வேரெனவே ஊன்றிவிட்டான் புனிதம் காக்க!
                           வெகுண்டெழுந்தான் புவியிலுள்ள கயமை மாய்க்க! 
                   ஊர்க்கூடித் தேரிழுப்போம் வாரீர்! வாரீர்!
                             உலககெங்கும் பொதுமறையின் புகழைக் காக்க!

புதன், 16 டிசம்பர், 2015

பாட்டுப் பொறுக்கிகளுக்குப் பாடம் நடத்திடுவோம்!பாட்டுப் பொறுக்கிகளுக்குப் பாடம் நடத்திடுவோம்!

வீட்டிலுள்ள நாய்கூட
   விட்டெறிந்தால் நக்கிவிட்டு
காட்டிவிடும் நன்றியதை!
  காவலனாய்ச் சுற்றிவரும்!

காட்டுமிரு ம்போல 
  கேடுகெட்டப்   பேடியவன்
பாட்டுப்பொ றுக்கியென
  பண்பாட்டில் தீவைத்தான்

வியாழன், 19 நவம்பர், 2015

வருக! கவியரசர் புகழ்பருக !

வருக! கவியரசர் புகழ்பருக  !

அள்ளஅள்ளக் குறையாத
   அமுதமெனத் திருக்குறளால்
தெள்ளெனவே வழிசொன்னான்
   திறம்படைத்த தேவனவன்!

செங்கரும்புச் சாறெடுத்துச்                  
  சந்தமிகு கவிசெய்தான்
தங்கமென வந்திட்ட
  தமிழ்க்கவிஞன் கம்பனவன்!

வெள்ளி, 2 அக்டோபர், 2015

பெண்ணே! தடைகளைத் தகர்த்து, விடைகளைக் காண்.          (வகை-(3) பெண்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரைப்போட்டி)

                      “வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளுக்காக எழுதப்பட்ட கட்டுரை. 

முதலில்....
 “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் 
 அறிவில் ஓங்கியிவ் வையம் தழைக்குமாம்”..
.என்று பாடிக் களித்தான் பாரதி. சாதிகளில் ஆகத் தாழ்ந்த சாதியாகச் சமூகம் கருதுவது ‘பெண் சாதி’யைத்தான். ஆதிகாலம் தொட்டு அண்மைக்காலம் வரை பெண்கள சக உயிராகக்கூடக் கருதப்படவில்லை என்பதை நினைத்தால் நெஞ்சம் கனக்கிறது. பலருக்குப் பெண் என்பவள் ஒரு நுகர்வுப் பொருளே!? பெண்களின் நேற்றைய நிலைப்பாட்டை, இன்றைய இடர்ப்பாட்டை, நாளைய செயல்பாட்டைப் பேச முனைகிறது இந்தக் கட்டுரை.

புதன், 30 செப்டம்பர், 2015

விரைந்து பாயும் விண்கலம் நீ!

வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி போட்டிக்கு எழுதப்பட்ட கவிதை -

                 விரைந்து பாயும் விண்கலம் நீ!

குட்டிவிதை முட்டியெழும் மண்ணைக் கீறி! 
குருவிகளும் கூடுகட்டும் மரத்தின் மீதில்!
பட்டுவிட்ட தாவரமும் தளிர்க்கும் மண்ணில்!
              படர்ந்திடவோர் கொழுகொம்பு கொடிகள் தேடும்!
 கட்டுடைத்த தண்ணீரும் வேக மாகக்                 
காட்டாற்று வெள்ளம்போல் சீறிப் பாயும்!
தொட்டவுடன் சுருங்கநீயும் சிணுங்கி யல்ல!   
                    தொடர்ந்துவரும் தோல்விகண்டு துவண்டி டாதே!

சனி, 26 செப்டம்பர், 2015

-வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி போட்டிக்கு எழுதப்பட்ட கவிதை -  

முயன்று வெல்வாய் ஞாலமதை! 

வெடித்துச் சிதறும் எரிமலைநீ!
     விரக்தி எதற்கு மானிடனே?
   அடித்து விரட்டு வேற்றுமையை!
        ஆணவம் எதற்கு மானிடனே!     
ஒடித்துப் போடு சாதியினை!
    உயர்த்து நல்ல நீதியினை!
  குடித்துக் குடித்துச் சீரழிந்தாய்!
        குடியை உயர்த்து ஆண்மகனே!      படித்து உயர்த்து மொழியினையே!
          பண்பில் உயர்ந்த தமிழினையே!
    நடித்துக் கெடுக்கும் நரிகளினை
          நயமாய் ஏய்க்கும் பேய்களினை
       கடித்துக்    குதறு   புலியெனவே!
     களத்தில் காட்டு வீரமதை!
    முடித்து வைப்பாய் தீமைகளை!
         முயன்று வெல்வாய் ஞாலமதை!


தடைக ளேது நீயெழுந்தால்
       தவிடு பொடியாய் உடைபடுமே!
   விடைகள் எல்லாம் மிகவிரைவாய்! வியந்து வருமே உன்செயலால்!
 உடைக்க வேண்டும் கொடுமைகளை!   
   உரைக்க வேண்டும் உண்மைகளை!  
 படைக்க வேண்டும் புதுமைகளை!   
        பாரில் முற்றும் புதியனவாய்!           
        (அறுசீர் விருத்தம்)

 உறுதிமொழி:
இந்த  படைப்பு தமது சொந்தப் படைப்பே என்றும், இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்றும், “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்றும் உறுதி மொழி என்னால் வழங்கப்படுகிறது. 
                                                             - மகா சுந்தர்  

வெள்ளி, 2 ஜனவரி, 2015


வலை உலக உறவுகளுக்கு வணக்கம்.. 11.01.2015 அன்று மாலை 5.30க்கு நடக்கவிருக்கும் கவிஞர்.புதுகை வெற்றிவேலன் அவர்களின் கண்ணகி காவியம் நூல் வெளியீட்டு விழாவிற்கு இதனயே அழைப்பாக ஏற்றுக்கொண்டு விழாவிற்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி...
Related Posts Plugin for WordPress, Blogger...