புதன், 16 டிசம்பர், 2015

பாட்டுப் பொறுக்கிகளுக்குப் பாடம் நடத்திடுவோம்!பாட்டுப் பொறுக்கிகளுக்குப் பாடம் நடத்திடுவோம்!

வீட்டிலுள்ள நாய்கூட
   விட்டெறிந்தால் நக்கிவிட்டு
காட்டிவிடும் நன்றியதை!
  காவலனாய்ச் சுற்றிவரும்!

காட்டுமிரு ம்போல 
  கேடுகெட்டப்   பேடியவன்
பாட்டுப்பொ றுக்கியென
  பண்பாட்டில் தீவைத்தான்

!
கண்டபடி ரசிகரெல்லாம்
  கணக்கின்றிக் கொடுத்ததனால்
உண்ட கொழுப்பா?
  ஊர்மேயும் நினைப்பா ?
கெட்ட வார்த்தைகளைக்
  கேவலமாய்ப் பாடிவிட்டு
எட்டிப் பார்க்கிறோமென
  எங்களைச் சொல்கிறாயே?!
 தட்டிகேட்க ஆளில்லையென
  தவறாய் நினைத்தாயோ?!
தள்ளாத வயதினிலும்
  தடிகொண்டு வாழ்ந்திட்ட
பொல்லாத கிழவனெங்கள்
  பெரியாரும் கேட்டிருந்தால்
கல்லாலே அடியென்று
  கடுங்கோபம் கொண்டிருப்பார்!
கூர்விழியும் நேர்மொழியும்
  கொண்டிருந்த எம்பாட்டன்
பாரதியும் நேர்நிறுத்தி
  காரிஉமிழ்ந் திருப்பான்!
செருக்கோடு தமிழ்வளர்த்துச்
  சிங்கமென வாழ்ந்திட்ட
நறுக்குமீசைத் தாசனுமே
  நாயெனவே இகழ்ந்திருப்பான்!
தாயவளும் பொறுத்தாளா?
  தங்கையிடம் சொன்னாயா?
தாய்க்குலத்தை இகழ்ந்திட்டாய்!
  தன்மானம் இழந்தவனே!
பொங்கிஎழுந் திடுவோம்!
  பொறுத்திருக்க மாட்டோமினி!
தங்குதடை ஏதுமின்றி
  தகர்த்திடுவோம் ஆணவத்தை!

7 கருத்துகள்:

 1. பொங்கிஎழுந் திடுவோம்!
  பொறுத்திருக்க மாட்டோமினி!
  தங்குதடை ஏதுமின்றி
  தகர்த்திடுவோம் ஆணவத்தை!

  அனைவரின் உணர்வினையும்
  அற்புதமாய் கவியாக்கியுள்ளீர்
  அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
 2. பொல்லாத கிழவனெங்கள்
  பெரியாரும் கேட்டிருந்தால்
  கல்லாலே அடியென்று
  கடுங்கோபம் கொண்டிருப்பார்!
  அருமை அய்யா...ரௌத்திரம் பழகுவோம்..

  பதிலளிநீக்கு
 3. சரியான தண்டனை விரைவில் கிடைக்க வேண்டும் ஐயா...

  பதிலளிநீக்கு
 4. அப்படிப் போடுங்க சுந்தர்.
  இதன் பேர்தான் அறச்சீற்றம் என்பது.
  (அதுசரி..உங்களை எழுத வைக்கணும்னா எவனாவது இதுமாதிரி அசிங்கமாப் பண்ணனுமா? அப்பப்ப உங்களமாதிரி அறச்சீற்றங்கள் பொதுவாக வந்துகொண்டிருந்தால் இந்த அசிங்கங்களெல்லாம் இல்லாமலே போகுமல்லவா?) நல்லது தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 5. வார்த்தைகளால் அந்த நாய்களுக்கு தண்டனையை அளித்து விட்டீர்கள். ஆனால் இது மட்டும் பத்தாதே.

  பதிலளிநீக்கு
 6. தீயென பொசுக்கும் பாட்டு -உலகினை
  வாயென இழுக்கும் கோர்த்து .
  கூரெனத் தீட்டுகின்றாய், சொல் கொண்டு
  பாரெனக் காட்டுகின்றாய் நம் பெருமை .

  தாடிக்கிழவனையும் தடியெடுக்க சொல்லுகின்றாய் -இந்த
  பேடிப்பயல்களுக்காய் பேரிகை முழக்குகின்றாய்
  ஓடிஒளிந்திடுவார் உன்பாட்டு அவர்கேட்டால்-கவியே
  நாடிநலம் கொள்ளுமுன்கவிதை நெஞ்சள்ளும்.

  பதிலளிநீக்கு
 7. சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்
  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...