அறுசீர் விருத்தம் ( என்னுள் கவியார்வத்தைத் தூண்டிய 'ஊமைக்கனவுகள்'..ஜோசப் விஜூ அய்யாவிற்கு நன்றி..!)

பாரதி வாழ்க! வாழ்க!
அடங்கிடாக் காளை யென்றே
ஆர்ப்பரித் தெழுந்து சீறி
முடங்கியே கிடந்தி ருந்த
மொழியினைச் சிகரம் ஏற்றிச்
சடங்கினை முட்ட றுத்துச்
சமமென வாழ்ந்து காட்டித்
தடம்தனைப் பதித்துச் சென்ற
தமிழ்க்கவி வாழ்க! வாழ்க!