ஞாயிறு, 26 மார்ச், 2017

சின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை

சின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை 

         மொழிக்குள் இன்னொரு மொழியை உருவாக்குவதுதான் கவிதை. கவிஞர்களின் உலகம் வேறு; நாம் காணும் உலகம் வேறு. கவிஞர்கள் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவதைகளோடு வாழ்கிறார்கள்.வாழ்வின் கடக்க முடியாத் தூரங்களை,துயரங்களைத் தாண்டுவதற்கு, தேவைதைகள் அவர்களுக்குத் துணை புரிகிறார்கள்.


         கவிஞருக்கு இரண்டு பெண்குழந்தைகள். அதாவது இரண்டு தேவதைகள். சின்னவளின் செல்லச் சிணுங்கல்கள் கவிஞரின் கவி ஆன்மாவை மீட்டியுள்ளது.

        ஒவ்வொரு கவிதையையும் நாம் கடந்து போவது அவ்வளவு எளிதல்ல. நம் நினைவுப் பரப்பில் நம் தேவதைகள் நம்மை மீட்டிய சுகராகங்கள் எட்டிப்பார்க்கின்றன. நம் உணர்வுகளை லேசாக்கி நம்மைப் பறக்கவிடுகின்றன. இது கவிஞரின் வெற்றி!.

  வீட்டின்கூடம் தாண்டி,விளையாடித் திரிந்தோம்...

   சிட்டுக்குருவிகள் வீட்டுக்குள் கூடு கட்டும்..என்று தொடங்குகின்றபோதே நம்மையும் மன்மணம் ம்வீசும் கிராமத்திற்கு , தாத்தா,பாட்டி,அத்தை எனக்  கூட்டுக்குடும்பம் நோக்கி கவிதை நம்மை கைபிடித்து அழைத்துசெல்கிறது.கூடுகள் கலைவதுபோல் வீடுகள் கலைந்தன....என்கிறபோது எதோ ஓர் சோகம் நம்மைக் கவ்விக்கொள்கிறது. சின்னவள் சிரிக்கிறபோது,நாம் தொலைத்துவிட்ட நம் மரபின் எச்சங்களும் நம்மைப் பார்த்து கேலியாய்ச் சிரிக்கின்றன.

       மதிப்பெண் பட்டியலைச் சின்னவள் நீட்டுவதும், அம்மாக்களின் அர்ச்சனையும், அப்பாக்களின் ஆதரவும் பெண்குழந்தைகளைப் பெற்றவர்களின் வீடுகளில் அன்றாட நிகழ்வுகள். காட்சியாகிறது கவிதை!

       மகள்களிடம் திட்டுவாங்காத அப்பாக்கள் உண்மையிலேயே சபிக்கப்பட்டவர்கள்..! 

  .........சுற்றும்/ கிரகங்களுக்குப்/ பெயரிட்டவள் 

           சனியை/ எனக்கெனத்/ தந்திருக்கிறாள்...

          கோபமேறிய/ என்னைக்/ கொஞ்சுகிறாள் 

          சனிக்குத்தானடா/ கிரீடமிருக்குதென ...

    கடந்தகால நினைவுகளைக்  குழந்தைகளிடம் சொல்வதில்தான் எத்தனை சந்தோஷம். ஞாபகவெளிகளில் மீளமுடியாமல் நாம் தவிக்கிறபோது நம்மை மீட்டெடுப்பது அவர்கள்தானே! "எனக்கே வழியானால்" கவிதை நம்மையும் மீட்கிறது.

சின்னவளின் சேட்டைகள் தொடரும்....   

8 கருத்துகள்:

  1. நல்லதோர் கவிப்பார்வை.... கவிஞருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான விமர்சனம்..வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. அருமையான விமர்சனத்திற்கு நன்றி. நூலாசிரியருக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...