கவிஞர்.கண்ணதாசனின் திருக்குறள் காமத்துப்பால் உரை ....!!

புத்தகத்தை எடுத்தேன்!! படித்தேன்......, "ஓர் கையில் மதுவும், மற்றொரு கையில் மங்கையரும் சேர்த்திருக்கும் வேளையில் என் ஜீவன் பிரிந்தால் தான் நான் வாழ்ந்த வாழ்க்கை நலமென்றாகும்.. இல்லை என்றால் ஏன் வாழ்ந்தாய் என்று இறைவன் என்னைக் கேட்பான்!.. என்று வெளிப்படையாகச் சொன்னவன் தானே!... காதல் ரசம் சொட்டச் சொட்டப் பாடிய கவிஞனின் காமத்துப்பால் உரை"....!!! ஆஹா!!!.... அவன் பாணியிலே சொன்னால்... "என்னைப் போட்டான் மதுக்குடத்தில் அள்ளி..!!".............................
கவியரசர் அறம்,பொருள் இரண்டுக்கும் எழுதாமல் ஏன் காமத்துப்பாலுக்கு மட்டும் உரை எழுதினார்....? இதோ அவரே கூறுகிறார் ........ "'குறளை முதலிலிருந்து படிப்பது சிரமமாக இருந்தால் கடைசியிலிருந்து படி ' என்று என் ஆசிரியர் கூறுவார் . நானும் கடைசியிலிருந்து துவங்குகிறேன் .அறம் ,பொருள் இரண்டுக்கும் எழுத பகவான் அருள வேண்டும் ". ஆனால் கவியரசரின் மூன்றாம் பாலுக்கான உரை மட்டுமே தமிழுலகத்திற்குக் கிடைத்தது .....!!! சமுதாய மாமுனிவர் மறைந்த குன்றக்குடி அடிகளார் அறம்,பொருளுக்கு உரை எழுதியுள்ளார்.இன்பத்துப்பாலுக்கு உரை கிடைக்காததற்குக் காலம் நம் கைநழுவிப் போய்விட்டதுதான் காரணம். கவியரசர் இன்பத்திற்கும் அடிகளார் முதலிரு பாலுக்கும் உரை எழுதினால்தான் பொருத்தமாக இருக்கும் என்பது காலத்தின் கணக்கு ......!!!. சரி உரைக்கு வருவோம் .... இன்றைய சூழலில் காதல் என்பதே கெட்ட வார்த்தை மாதிரி ஆகிவிட்டது ....ஆனால் காமத்தைக் கூட கண்ணியமாகச் சொன்னவன் நம் வள்ளுவன் ...
அதனை அறிந்தவரும் அதனாலே மகிழ்ந்தவரும்
"மலரினும் மெல்லிது காமம் ;சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் " . இதற்கு கண்ணதாசனின் கவியுரை ..........................
"பூவைவிட மெல்லிது ,பொங்கி வரும் காமமது !.அதனை அறிந்தவரும் அதனாலே மகிழ்ந்தவரும்
எத்தனைபேர் பூமியிலே ? ஏதோ சிலபேர் தான் !.........
இதனைப் படிக்கும்போது பட்டிமன்றம் ஒன்றில் நடுவராக இருந்த நகைச்சுவை நாவலர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் சொன்ன செய்தி நினைவுக்கு வருகிறது .....
திருக்குறளை மொழிபெயர்க்க முனைந்த பிரெஞ்சு அறிஞர் ஒருவர் "மெல்லிது" என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்லைத் தேடியும் கிடைக்காமல் (soft,smooth) சொன்னாராம் .......
"மெல்லிது மெல்லிது மெல்லிது வள்ளுவன் சொல்லிய
சொல்லிது சொல்லிது சொல்லிது"..............
என்று .
"மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி ".......
என்ற குறளுக்கு "பெண்ணில்லாத ஊரில் பிறந்தாளைப்போல வந்த வெண்ணிலவே ! என் கண்மணியின் முகம்போல கனிவான ஒளிவீச உன்னால் முடியுமா ?!..முடியும் என்றால் உன்னை நான் காதலிப்பேன் ..! என்று காமத்துப்பால் முழுமைக்கும் எளிய ,நடகப்பாங்கிலான உரையை நளினமாகச் சந்தச் சுவையோடு கவியுரையாகத் தந்த கவியரசர் காலம் கடந்தும் வாழ்வார் .
நிறைவாக, நூலின் முன்னுரையில் [வசந்த வாசல் ] கண்ணதாசன் கல்விச் சமூகத்தை நோக்கி எழுப்பிய வினாவையே இக்கட்டுரையின் மூலமும் நானும் கேட்க ஆசைப்படுகிறேன் ........
"காமத்துப்பால் நம் பண்பாடு தப்பாத நல்ல நாடகம் .. எதற்காக காமத்துப்பால் , மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்படவில்லை என்பது எனக்குப் புரியவில்லை ..?!"
நாமும் சிந்திப்போம் ; கல்லுரி மாணவர்களுக்காவது காமத்துப்பாலை பாடமாக வைப்போம் ......!
காலத்தின் கணக்கு எவ்வளவு கத்சிதம்..?!
பதிலளிநீக்குபுயல் வேக பங்களிப்பு..
அருமையான பணி...
தொடர்க..
தங்களின் வழிகாட்டுதலுக்கும் வலைப்பூவில் வந்து வாழ்த்தியமைக்கும் நன்றி...........
நீக்குகடைசியில் உள்ளது இப்போது முதலில் உள்ளது - நாடு சீரழிய அதுவும் ஒரு காரணம்...!
பதிலளிநீக்குநாடு சீராக மூன்றாம் பால் முறையாக இருக்க வேண்டும்.....
பதிலளிநீக்குவலை சித்தரின் வருகைக்கு நன்றி...
வணக்கம் ஐயா
பதிலளிநீக்குகவிஞர் கண்ணதாசன் அவர்களின் காமத்துப்பால் உரையும், உங்கள் வித்தியாசமான சிந்தனையும் மிக அருமை. இந்த காலத்துப் பசங்களுக்கு ஆவீன் பாலிலிருந்து அமலாபால் வரை அத்துப்படி. ஆனால் காமத்துப்பால் பற்றிய புரிதல் மிக குறைவு என்னும் உங்கள் இல்லையில்லை கவிஞர் கண்ணதாசன் அவர்களின் ஆதங்கம் புரிகிறது. பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து வித்தியாசமான சிந்தனைகளை எழுத்தாக்கித் தாருங்கள். சந்திப்போம் ஐயா நன்றி..
தங்களின் வருகைக்கு நன்றி .நன்றி !!! ம் ..ம் உங்களுடைய ஆதங்கமும் புரிகிறது ..தொடர்ந்து சந்திப்போம்....சிந்திப்போம் .!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
தங்களின் பதிவை முழுமையாக படித்த போது கவிஞரின் மனதில் ஆதங்கம் புரிகிறது..
அதைப்போல இந்தக்கருத்தை பதிவாக தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ஐயா ..! தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
நீக்குதொடர்ந்து சிந்திப்போம் ..
அய்யா நான் திருக்குறள் பற்றிப் பேசுமிடங்களில் எல்லாம் இதைச் சொல்லிவருகிறேன். கண்ணதாசன் கருத்தோடு உங்கள் கருத்தைச் சேர்த்துச் சொன்னதுதான் சிறப்பு. தொடர்ந்து இதுபோல சிந்தனைக் கட்டுரைகள், நூல் அறிமுகங்களை எதிர்பார்க்கிறேன். சில “மட“ப்பதிப்புகளில் காமத்துப் பாலே இருக்காதாம். ஆனால் பதிப்பாளர்களிடம் கேட்டால் பதில் எதிர்மறையாக வருகிறது. “அய்யா திருக்குறள் புதிய பதிப்பு ஒன்று போடவேண்டும். தங்களிடம் என்னென்ன பால் இரு்கிறது? என்ற கேள்விக்கு, “பொருளும் இன்பமும் இருக்கிறது. மடத்தினர் அறத்தைத்தான் தேடிவருகிறார்கள்!” இது எப்படி இருக்கு? தொடர்ந்து எழுதுங்கள் அய்யா. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஐயா ,தங்களின் வாழ்த்துக்கு நன்றி...இன்பம் இல்லாத பால் நன்றாக இருக்காது...அறமும்,பொருளும் இன்பத்தில் முடிவதுதான் இயல்பு. என்னை வலையில் (வலைப்பூவில்) சேர்த்ததற்கு நன்றி.
நீக்கு'குறளை முதலிலிருந்து படிப்பது சிரமமாக இருந்தால் கடைசியிலிருந்து படி ' என்று என் ஆசிரியர் கூறுவார் . நானும் கடைசியிலிருந்து துவங்குகிறேன் .அறம் ,பொருள் இரண்டுக்கும் எழுத பகவான் அருள வேண்டும் ". கடைசியிலிருந்து முதலுக்கு வந்த கவிஞரின் உரைப்பணி இலக்கியத்தில் முதலிலேயே இருக்கிறது. பதிவு மிக அருமை. தொடர்ந்து பயணியுங்கள். வாழ்த்துகள் !
நீக்குநன்றி ஐயா! தொடர்ந்து பயணிப்போம்...நன்றி!
நீக்குஅழகிய, ஆழ்ந்த சிந்தனைக்குரிய, தேவையான கருத்துகளடங்கிய கட்டுரை. தொட்டுத்தொடர்க..
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துகளுடன் இனித் தொடரும் ஐயா! நன்றி!
நீக்குஉங்களின் வருகை எனக்கு உவகை..!
பதிலளிநீக்குஉங்களின் வாழ்த்து எனக்கு வசந்தம்!!
மாணவர்-மாணவியர்கள் தாம் விரும்பியபோது இன்பத்துப்பாலை-பொருட்பாலை-அறத்துப்பாலை எடுத்துப் படிக்க விரும்பினாலும் அவர்களின் கைகளில் ஒரு திருக்குறள் நூல் மாணவப்பருவத்திலே அவர்களுக்குத் தேவைப்படுமென்பதை ஈராயிரம் ஆண்டுகளாகியும் தமிழக
பதிலளிநீக்குமக்கள் இன்னமும் உணர்ந்துகொள்ளவே இல்லையே!