வெள்ளி, 28 நவம்பர், 2014

GOOGLE என்னும் மாய உலகம்

        மாயப் படங்கள்

வலையுலக நண்பர்களே..வணக்கமுங்க..!.ஜாலியா ஒரு பதிவு.!.

google..என்கிற மாய உலகத்தில் நம்மை மிரளவைக்க,நம் புருவங்களை உயரவைக்க,எத்தனையோ அதிசயங்கள் இருக்கின்றன..!.

நான் ரசித்த சில படங்கள்..இதோ..

பார்த்துவிட்டு கமெண்ட் அடிங்கோ..! அது கவிதையாகவோ,நச்சுனு காமெண்டாகவோ இருக்கட்டும்..!.

உங்கள் கற்பனைக் குதிரையைப் பறக்க விடுங்க..!

அட என்ன அவசரம்..?

"பெண்ணே..
 சக்கரங்களைக் கழற்றியது யார்..?
 சதிகளை வென்றும் நீ 
 சாதனை படைக்கிறாய்..!
 உன் வேகத்திற்கு முன்னால் 
 விதிகள், சதிகள் எல்லாம் 
 வெருண்டோடும்.!
 புயலெனப் புறப்பட்டாய்!
 தடை எது வரினும் 
 பொடிப்பொடி யாக்கு!
 பூமிப் பந்தைப் 
 புதுமையாக்கு..!"
 எண்ணமெல்லாம் வண்ணமே..!..வளமே..!
 மரத்திலிருந்து விழுந்த
 இலைகள் கூட இயங்குகிறதே..!
 மனிதா நீ..?

"வண்ணத்துப் பூச்சி உடம்பில்
ஓவியங்கள் அதிசயம்!"..
கவிஞர்.வைரமுத்து 
..................................................................................................
 கொக்கிற்கும்
 குழந்தையை  வளர்க்க ஆசையோ..?
(பள்ளிக்கூடத்துல சேர்த்துப் பாடாப் படுத்துறாங்கலேன்னு கொக்குக்குக் கோபமோ..?)

குழந்தையைக் கொஞ்சும் குருவி,
குருவியோடு விளையாடும் குழந்தை!
(..ஐயா.....இன்னைக்கு மட்டும் எனக்கு லீவு..)
! ஓங்கி உதைச்சா...ஒன்றை டன் எடைடா..
படிப்போம்..! தாய்நாட்டிற்கு உழைப்போம்..!

  அட...என்னால் படிக்க முடியுதே ..!
 மரங்கள் வளர்ப்போம்..!
 மழைவளம் காப்போம்..! ரொம்ப...ஜில்லுன்னு இருக்குமே..!
சூடா ஒரு டீ சாப்பிடுவோமா?


நம் தவறுகளை நாமே திருத்துவோம்..!
 
உங்கள் கருத்துகளை, கவிதைகளை அள்ளி வீசுங்க...!
(அசையும் படங்களைப் பார்த்தவுடன், உங்கள் மனதில் எழுந்த உணர்வுகளை அப்படியே அள்ளி விடுங்க..) 

28 கருத்துகள்:

 1. 01. பெண்ணே ஏண்டியம்மா ? இந்த அவசரம் மெதுவாகப்போ (பேரூந்து ஓட்டிக்கொண்டு ஓட்டுனர்) எருமையோடு வருகிறான் எமன்.
  02. கண் உள்ள மனிதன் செய்ய முடியாததை கணினி நீ செய்கிறாயே...
  03. இலைகளே இன்னும் வலிக்கிறதோ தாயின் (மரம்) பிரிவு.
  04. வண்ணத்துப்பூச்சியே வந்து உறங்கு வலிக்கப் போகிறது சிறகுகள்.
  05. கொக்கே எவ்வளவு நேரம் சுமந்து கொண்டே பறப்பாய் ? வா எனது வீட்டு முற்றத்தில் மாட்டி விடு.
  06. பாப்பா பகுத்துண்டு வாழ்கின்றாயே இந்த வயதிலும் வாழ்க வளமுடன்,
  07. படிக்காமல் விட்டதற்க்காக வருந்துகிறேன் நண்பா...
  08. அப்படீனா ? ஓங்காமல் உதைத்தால் ? எத்தனை டன்.
  09. நான் படித்தே காண்பித்து இருக்கிறேன் நண்பரே தலைப்பு ‘’கள்ளிச்செடி’’ இதோ இணைப்பு.
  http://www.killergee.blogspot.com/2013/09/blog-post.html
  10. 11. 12. 13. 14. வீட்டுக்கு ஒரு மரகம் வளர்ப்போமே...
  15. போதும் கொஞ்சமாக...
  16. சர்க்கரைதான் குறைவு ஒருவேளை எம்மை ஸுகர் கம்ப்ளைண்ட்னு நினைத்தீரோ...
  17. நம்மை, நாமே திருத்துவோம்.

  அருமை நண்பரே வாழ்த்துகள். நான் தங்களை தொடர்கிறேன் தாங்கள் வராவிடினும்.....

  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே..உங்களின் வருகைக்கு நன்றி.! மன்னித்துவிடுங்கள் என்னை..இனி நிச்சயம் இடைவெளியில்லாமல் தொடர்வேன்..!
   ..வரிசையா..நம்பர் போட்டு...கலக்கிட்டீங்களே....அருமை.

   நீக்கு
  2. உங்களால் படிக்க முடியுமா..?இந்தப் பகுதியை ஆடியோவோடு தெளிவாகத் தெரிந்துகொள்ள killergee இன் இந்தப் பக்கத்துக்குப் போங்க.! 'கள்ளிச்செடி' என்ற தலைப்பில் கலக்கியிருக்கிறார்.!
   http://www.killergee.blogspot.com/2013/09/blog-post.html

   நீக்கு
  3. விளம்பரம் விழும்பாரமே என அறிந்தும் எமக்கு விளம்பரம் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 2. ஒரு ஆசீர்வதிக்கபட்டநாளில்
  என் கானகத்தில் பொழிகிறாய் !!
  நடுக்கம் மறைத்தபடி
  நனைந்து கொண்டே இருக்கிறேன்
  உன் நினைவெனும்
  பெருமழையில்!!
  தெறித்திடும்
  ஒரு புன்னகைத் துளியில்
  படபடக்கிறதென் கிளைகள்
  உதிர்கிற என் சருகுகளை
  சேகரித்தபடி நகர்கிறது
  உன் நதி வழி!!  அண்ணா, நாலு மழைப் படங்கள் ஏற்படுத்திய தாக்கம்:)) இனிமே என்கிட்டே கவிதை கேட்பிங்க:))))) (பாவம் அவரே கன்பீஸ் ஆகிட்டாரு)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதை மழையில்
   இதயம் நனைந்தது
   மழையின் தாகம்
   மரங்கள் செழித்தன
   பசுமை வெளியில்
   மனங்கள் சிலிர்த்தன
   எண்ணம் இணைந்து
   எழுத்தாய்ப் பிறந்தது!...இப்படி நாங்களும் கவிதை (?!)எழுதிக் குழப்புவோமுல்ல ..!

   நீக்கு
  2. சொல்வேந்தரே!
   //ஒரு ஆசீர்வதிக்கபட்டநாளில்
   என் கானகத்தில் பொழிகிறாய் !!
   நடுக்கம் மறைத்தபடி
   நனைந்து கொண்டே இருக்கிறேன்
   உன் நினைவெனும்
   பெருமழையில்!!
   தெறித்திடும்
   ஒரு புன்னகைத் துளியில்
   படபடக்கிறதென் கிளைகள்
   உதிர்கிற என் சருகுகளை
   சேகரித்தபடி நகர்கிறது
   உன் நதி வழி!//

   இதற்கு மேலும் நாங்கள் எழுத ஏதேனும் இருக்கிறதா என்ன?
   ஒன்னு மட்டும் தெரியுது,
   இப்படித் தண்ணி ரொம்புற மாதிரி மழை பெஞ்சு, ஸ்கூலெல்லாம் லீவு விட்டா, சூடா டீயக்குடிச்சிக்கிட்டே, எல்லாராலையும் பின்னி எடுக்க முடியாது.
   ஓவியப் பதிவு...கண்ணை உழுகிறது!
   கருத்தில் பதியனிடக் கவிதை பிறக்கிறது!

   ஏதோ எங்களால் முடிஞ்சது..
   தப்பிருந்தா எவ்ளோ தப்பிருக்கோ அதப் பரிசில் குறைச்சுகிட்டு மீதிய கொடுத்தாப் போதும் அய்யா!
   நன்றி

   நீக்கு
  3. தங்கை மைதிலியின் கவிதை ...அசையா ஓவியம்..! அடர்த்தியான மழை போன்ற கவிதை.!
   வார்த்தைகளுக்கிடையில் ..அடர்த்தியான உணர்வோவியங்கள்..!ஜில்லென மழையில் நனைந்தது போல் சிலிர்க்கிறது மனசு!...அதுதான் தங்கை..!
   தங்களின் பின்னூட்டமோ கல்வெட்டுப் போன்ற சொல்வெட்டுகள்..!.அருவிபோல் கொட்டுகிறது,உங்கள் உணர்வு வெள்ளம்..!.இதில் ஓரத்தில் நின்று மழையை ரசிக்கும் ஒரு மாணவன் நான்.
   (ஒவ்வொரு சொல்லையும் தேர்ந்தெடுக்க நான் படும் அவஸ்தை எனக்குத்தான் தெரியும்..உங்கள் அன்பிற்கு நன்றி...சொல்வேந்தர் ..எல்லாம் வேண்டாம்.)
   நன்றி அய்யா.!

   நீக்கு
 3. ஆஹா சூப்பர் சார்...அந்த பெண்ணைப்பார்த்து வியந்து...இலையின் ஓசையில் மயங்கி மழையில் நனைந்து காப்பிக்குடித்து,என்னாலும் படிக்க முடியுதே என மகிழ்ந்து...அருமை....உண்மையில் ஜாலியா...ய்

  பதிலளிநீக்கு
 4. Sakothararuku vanakkam
  Asathal pathivu. Karpanaikalkalai thuundi viteukenga. Tamilil varukiren. nantringa sagotharar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்..!இந்த தா.ம (தமிழ்மணம்)....இதெல்லாம் எனக்கும் சேர்க்கக்கூடாதா..?

   நீக்கு
 5. எனக்கு இந்த கூகிளில் தேடுவதற்கு பொறுமை ரோமப் இருக்காது. தங்களின் இந்த படங்களை எல்லாம் பார்க்கும்போது,நீங்கள் எவ்வளவு பொறுமைசாலி என்று தெரிகிறது.
  ஒவ்வொரு படத்துக்கு ஏற்றவாறு அருமையான குறிப்புகள். அசத்துங்கள் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா..உங்கள் வருகைக்கு நன்றி....பொறுமையெல்லாம் இல்லை...ரோம்பச்சொம்பேறி..நான் .!
   உங்களின் பதிவுகளைப் பார்த்து அசந்து போவேன்..!
   நன்றி..!

   நீக்கு
 6. படங்கள் ஒவ்வொன்றும் பார்க்கப் பார்க்க அழகு நண்பரே
  கடைசியில் தேநீர் விருந்தும் கொடுத்துவிட்டீர்க்ள்
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விருது பெற்ற கரந்தையாருக்கு,இந்த எளியோனின் தேநீர் விருந்து..!
   நன்றி..!

   நீக்கு
 7. தங்கள் எண்ணப் பறவையின் வண்ணப் படங்கள் எல்லாமே அழகு. எல்லோரையும் அந்த சக்கரம் இல்லாத சைக்கிள் ஓட்டும் பெண் கவர்ந்து இருப்பாள் என நினைக்கிறேன். எழுத்துக்கள் பிறழ்ந்த போதும் அந்த மாயாவினோத செய்தியை பொருள் கொள்ள முடிந்தது.

  பதிலளிநீக்கு
 8. சுந்தர் அய்யா, உங்களின் முந்திய கூகுள் படங்களை நான் எனது பதிவில் எடுத்துப் போட்டிருந்தேன். இப்போது புதிதாய்க் கண்டு வந்து கொடுத்துக் கலக்கிவிட்டீர்கள்.. அருமையோ அருமை. எல்லாம் முடிந்து, கடைசியில் எழுதி அழித்தது ஆச்சரியப்பட வைத்தது. தேநீரு் கப்பு வழிய வழிய ஊத்தினாத்தான் சாப்பிடுவோம்னு சொன்னா வழியவெ மாட்டேங்குது... அப்பறம் கவிதை கேட்டீங்க இல்ல.. என் தங்கச்சிகிட்ட சொல்லியிருந்தேன்.. எழுதிருச்சில்ல..? அய்யா நாங்க காளமேகம்ல..? நீங்க சொன்னாலும் வராது, நாங்க முறுக்கினாலும் வராது தானா வந்தாத்தான் உண்டு.. (அப்பாடா ஒரு வழியா சமாளிச்சிட்டம்ல?) தொடர்ந்து இதமாதிரி எதயாச்சும் புதுசா பண்ணிக்கிட்டே இருங்கய்யா... தொடர்ந்துகிட்டு இருப்போம். நன்றி

  பதிலளிநீக்கு
 9. இவ்வாறாகப் பதிவுகளைத் தேடி கண்டுபிடித்து உரிய விளக்கங்களையும், கருத்துக்களையும், கவிதை நடையிலும்கூட பகிர்ந்தமை நன்றாக இருந்தது. சூடாக காபி புகைப்படத்தை மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 10. பதில்கள்
  1. நன்றி..அய்யா..! இன்னும்நிறைய விஷயங்களைத் தங்களிடமிருந்து தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது..மீண்டும் தங்களைப் புதுகைக்கு அழைப்போம்...

   நீக்கு
 11. அடடா எத்தனை ரசனை இதயங்கள் அத்தனையும் ஒரே இடத்தில்...
  அதில் எனது இதயத்தையும் ஒன்றாய் சேர்த்துக் கொள்ளலாமா அய்யா? கவிதை எழுதச் சொன்னீர்கள் அல்லா ...உங்கள் நகரும் படங்களைப் பார்த்து அதன் பின் எந்தன் கற்பனையும் நகர்ந்து கொண்டிரு்பபதால் நிருத்து வைந்து எழுதப் போராடிக்கொண்டிருக்கிறேன் அய்யா..போராட்டம் நின்றதும் கவிதை வரும் என்று நம்புகிறேன்..நம்புவோம்...(இந்த புள்ளக்கு சேட்ட அதிகம்னு நீங்க நெனக்கிறது எனக்கு அப்புடியே தெரியுது அய்யா.. எப்புடிடிடிடிடிடிடி

  பதிலளிநீக்கு
 12. வருகைக்கு நன்றிம்மா ...பேச்சிலும்,எழுத்திலும் உங்களைப்போன்ற ஆர்வமான இளைஞர்களை வரவேற்க,வாழ்த்துப்பாட இலக்கிய உலகம் காத்திருக்கிறது..!

  பதிலளிநீக்கு
 13. உங்கள் ஓவியத் திறன் பதிவில் வந்துவிட்டது
  ஏற்கனவே வந்தாலும்
  இந்தமுறை நிறைவாக இருந்தது..
  சிறு சுற்றுலா போய் வந்த மாதிரி இருந்தது...
  கலக்கல் பதிவு

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...