சனி, 26 செப்டம்பர், 2015

-வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி போட்டிக்கு எழுதப்பட்ட கவிதை -  

முயன்று வெல்வாய் ஞாலமதை! 

வெடித்துச் சிதறும் எரிமலைநீ!
     விரக்தி எதற்கு மானிடனே?
   அடித்து விரட்டு வேற்றுமையை!
        ஆணவம் எதற்கு மானிடனே!     
ஒடித்துப் போடு சாதியினை!
    உயர்த்து நல்ல நீதியினை!
  குடித்துக் குடித்துச் சீரழிந்தாய்!
        குடியை உயர்த்து ஆண்மகனே!



      படித்து உயர்த்து மொழியினையே!
          பண்பில் உயர்ந்த தமிழினையே!
    நடித்துக் கெடுக்கும் நரிகளினை
          நயமாய் ஏய்க்கும் பேய்களினை
       கடித்துக்    குதறு   புலியெனவே!
     களத்தில் காட்டு வீரமதை!
    முடித்து வைப்பாய் தீமைகளை!
         முயன்று வெல்வாய் ஞாலமதை!


தடைக ளேது நீயெழுந்தால்
       தவிடு பொடியாய் உடைபடுமே!
   விடைகள் எல்லாம் மிகவிரைவாய்! வியந்து வருமே உன்செயலால்!
 உடைக்க வேண்டும் கொடுமைகளை!   
   உரைக்க வேண்டும் உண்மைகளை!  
 படைக்க வேண்டும் புதுமைகளை!   
        பாரில் முற்றும் புதியனவாய்!           
        (அறுசீர் விருத்தம்)

 உறுதிமொழி:
இந்த  படைப்பு தமது சொந்தப் படைப்பே என்றும், இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்றும், “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்றும் உறுதி மொழி என்னால் வழங்கப்படுகிறது. 
                                                             - மகா சுந்தர்  

11 கருத்துகள்:

  1. அருமை நண்பரே போட்டியில் வெற்றி பெற எமது மனமார்ந்த வாழ்த்துகள் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மின்னல் வேகக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.........

      நீக்கு
  2. குடித்துக் குடித்துச் சீரழிந்தாய்!
    குடியை உயர்த்து ஆண்மகனே!
    படித்துக் படித்துச் சொல்கிறேன்!
    குடியை ஒதுக்கு பெண்மகளே!
    தமிழ்க் குடிகள் உயரவே!

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. தடைக ளேது நீயெழுந்தால்

    உண்மைதான் நண்பரே
    வெற்றிபெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வாருங்கள்.. கணினித்தேரை வடம்பிடிப்போம்!
    வரலாற்றில் நாளை நாமும் தடம் பதிப்போம்..!

    பதிலளிநீக்கு
  5. இதுக்குமேல நாங்க எல்லாம் எழுத என்ன இருக்கு:((
    அட்டகாசமாய், அதேநேரம் எளிமையாயும் இருக்கிறது கவிதை. வெற்றிபெற வாழ்த்துகள் அண்ணா!:)

    பதிலளிநீக்கு
  6. தடதட வென்னும் நும்கவியால்
    தடைகள் யாவும் பொடிபடுமே.

    வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்.

    படைகள் பெருகும் மரபுகளில்
    பழைய இரும்பிற் புதிதொருவாள்!
    அடையும் சிகரம் எளிதாக
    அவலம் தீரும் வழிசெய்த
    நடையில் சொல்லின் சுடர்த்தீயில்
    நகராக் கண்கள் நிலைகுத்த
    விடைகள் அறியா மனக்கிளர்ச்சி
    விதைத்த கவிதை வென்றிடுக!

    வெற்றிக்கு வாழ்த்துகள் ஐயா!

    பதிலளிநீக்கு
  8. அருமையான விருத்தம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  9. விருத்தம் அருமை.
    .
    வெற்றிபெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...