திங்கள், 14 மார்ச், 2016

கதை சொல்லப்போறேன்...

வலையுலக உறவுகளுக்கு வணக்கம்..எண்ணப்பறவை..நீண்ண்ண்ட...நாட்களாக வலைக்காட்டில் பறக்கவில்லை....இனி அவ்வப்போது...தன சிறகை மெல்ல விரித்துப் பறக்கும்.

(...இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது...என்னவென்றால்...இனி இந்தப் பறவை வாரம் ஒரு கதை சொல்லப் போகுது....டமடமடமடம.....)கதை முன்னோட்டம்

...இரவு பத்து மணி..சாப்பிட்டுவிட்டுப் படுத்தேன்..பக்கத்தில் .."அப்பா கதை சொல்லுப்பா"..சின்னவள் சிணுங்கினாள்.."என்ன..கதைப்பா..சொல்றது..?".சும்மா தூங்குப்பா".என்று அதட்டினேன்..".ஏம்ப்பா..எத்தன கதை கேட்டிருப்ப...படிச்சிருப்பே..அதெல்லாம் ஞாபகப்படுத்திச் சொல்லுப்பா"..என்று அவள் அதட்டலாகக் கேட்டாள்...
..இந்தக் கதைகள் ..நான் படித்தபோது,..அல்லது கேட்டபோது..எனக்குள்  சின்னச் சின்ன மின்னல்களை ஏற்படுத்தின...உங்களுக்குள்ளும் ..மின்னல்கள் தோன்றுகின்றனவா..பார்ப்போம்.

கதை ..1     "பல்பு"

எடிசன் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார். தன்னுடைய அரிய கண்டுபிடிப்பான மின்சார பல்பு இந்த உலகத்தில் எத்தனை மாற்றங்களை உண்டாக்கப் போகிறது..இரவைப் பகலாக்கப் போகிறது'..என்பதை நினைக்கும்போதே எடிசனின் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது..சரி..இதை முதலில் நண்பர்களுக்கும் அருகே இருக்கிற அறிஞர்களுக்கும் வெளிப்படுத்துவோம் என முடிவு செய்தார். 

அந்த அறையில் உள்ளவர்கள் எடிசனின் பேச்சைக் கேட்க ஆவலோடு இருந்தனர்.எடிசன் தன் கண்டுபிடிப்பான பல்பு பற்றிச் சொல்லச் சொல்ல அவர்களின் ஆவல் அதிகரித்தது. .எடிசன் தன்  உதவியாளரை அழைத்து ,பக்கத்திலே இருக்கிற ஆய்வகத்திலிருக்கும் 'பல்பை' எடுத்துவரச் சொன்னார்.

.உதவியாளர் ஆய்வகத்திற்குச் சென்று மிக்க கவனத்துடன்..?.. அதனை எடுத்துவந்தார். எடிசனும் அறிஞர்களும் இருக்கும் அறையின் வாசலுக்கு வரும்போது அவர் கையிலிருந்து நழுவி ..கிழே  விழுந்து 'படார்'..என உடைந்தது..அனைவரும் பதறிப் போனார்கள்.

  எடிசன் நிதானமாகச் சொன்னார் "பிரச்னையில்லை..இன்னும் ஒரு மணி நேரம் பொறுத்தீர்கள் என்றால் மீண்டும் அதனைத் தயாரித்துவிடுவேன்...அதனைத் தயாரிப்பதற்கான பொருட்கள் என்னிடம் உள்ளன ..அதுவரை பொறுத்திருங்கள்." என்று சொல்லிவிட்டுத்  தன் ஆய்வகம் சென்றார்.

ஒருமணி நேரம் கழித்து வந்தார்."வெற்றிகரமாகத் தயாரித்துவிட்டேன்.."என்று சொல்லி, அதே தன்  உதவியாளரை அழைத்து,"ஆய்வகத்திலிருந்து பல்பை எடுத்துவாருங்கள் என்றார். அனைவரும் "அவரை அனுப்புகிறீர்களே இது சரியா?"..என்று கேட்டனர்.

அப்போது எடிசன் சொன்னார் ..."பல்பு உடைஞ்சா அதை மீண்டும் செய்துவிடலாம்.ஆனால் ஒருவரின் மனசு உடைஞ்சா அதை சரி பண்ண யாராலையும் முடியாது.!"

எத்தனை பேர் மனசை உடச்சிருப்போம் .அவர்களைச் 'சரியான  பல்பு'ன்னு கேலியும் செய்கிறோம். மாறுவோம்.   

  

 13 கருத்துகள்:

 1. அற்புதமான கதை! அருமையாகச் சொல்லிவிட்டீர்கள் சுந்தர்! வாழ்த்துகள்... இதே “கதை சொல்லப் போறேன்” தலைப்பில் தொடர்ந்து கதை சொல்ல வேண்டுகிறேன் நல்ல தலைப்புக்கும் ஒரு பாராட்டைச் சேர்த்துக் கொள்ளவும். தொடர்க..தொடர்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தொடர் ஊக்குவிப்பினால்,நான் எழுதுகிறேன்..தொடர்ந்து எழுதுவேன் ஐயா!

   நீக்கு
 2. அருமையான கதை நண்பரே
  எடிசன் விஞ்ஞானி மட்டுமல்ல
  மனிதர்களின் மனதையும் அறிந்தவர் கணித்தவர் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்
  நன்றி நண்பரே
  தொடர்ந்து எழுதுங்கள்

  பதிலளிநீக்கு
 3. கரந்தையாரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!

  பதிலளிநீக்கு
 4. எனக்கு அறிவு என்னும் பல்பு எரிய துவங்குகிறது... அருமை அய்யா

  பதிலளிநீக்கு
 5. ஆஹா...நல்ல கதையா இருக்கே...

  வாங்க..வாங்க..
  சின்னவள் இருக்கும் வீடெல்லாம் கதை கேட்கத்தான் செய்யும்..

  பதிலளிநீக்கு
 6. வரலாற்று நிகழ்வுகளைக்கூட கதைஇலக்கிய வடிவில் படைக்கும்போது மிகஅழகாகவே இருக்கிறது. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...