வியாழன், 7 ஏப்ரல், 2016

என்ன செய்ய வேண்டும் புதிய அரசு?!

என்ன செய்ய வேண்டும் புதிய அரசு?!

         தேர்தல் களம் அனல் பறக்கிறது! தனிமனிதச் சாடல்களும்,தனக்கு இணங்காத அணியைச் சீர்குலைக்கும் ராஜ தந்திரங்களும்?!! எதேச்சாதிகாரங்களும் ,கட்சிகளுக்குள்ளே நடக்க இருக்கும் உள்குத்து அநாகரீகங்களும் இன்னும் பரபரப்பான தலைப்புச் செய்திகளாகி ஊடங்களுக்குத் தீனி போடும்!...போகப்போக அரசியல் வானில் வறண்ட வானிலையே காணப்படும்.!

ஆட்சி அமைக்கப் போவது யார்?..எந்தக்கூட்டணி..!? இந்தக் கேள்விக்கு மே 16க்குப் பிறகே விடை தெரியும்.

வரப்போகிற ஆட்சி என்ன செய்ய வேண்டும்..? அது ஆண்டுகொண்டிருக்கிற, ஏற்கனவே ஆண்ட, அல்லது புதிய கூட்டணிகள்...எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும்..! இனியாவது  தமிழகம் உருப்பட என்ன செய்ய வேண்டும்..?..அனைவரும் இந்த இலக்கை நோக்கிச் சிந்திப்போம்!(இதைப் பற்றிய விவாதங்கள் ஊடகங்களில் பெரிதும்  நடப்பதில்லை என்பது வேதனையான விடயம்..)..வாருங்கள் சேர்ந்து சிந்திப்போம்..!

புதிய அரசு உடனடியாக செய்ய வேண்டியவை..!

1."மதுக்கடைகளை" மூடவேண்டும். இந்த விடயத்தில் நிதானத்தை!? அரசு கடைபிடிக்க வேண்டும். உடனடியாக மூடுவது  என்பது எதார்த்தமானது அல்ல!. தொடர்ந்து குடித்தவர்கள் திடீரென நிறுத்தினால், அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படலாம்!..அப்படி உள்ளவர்கள் மற்றும் மருத்துவரின் ஆலோசனையின்படி குடிப்பவர்களுக்கு, கொஞ்ச காலத்துக்கு தவிர்ப்பு அளிக்கலாம்.அவர்களை முழுமையாக மதுவிலிருந்து மீட்க அரசு மருத்துவ உதவிகளை அளிக்க வேண்டும்.

  * குடியினால் பாதிப்படைந்தவர்கள் அதிலிருந்து மீள, அரசே மறுவாழ்வு அளிக்கும் விதமாக மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சைகளை இலவசமாக அளிக்க வேண்டும்.

   *டாஸ்மாக் கடைகளைப் பால் விற்பனையகங்களாகவோ, அவசர மருத்துவ உதவி மையங்களாகவோ மாற்றலாம்.

  *அந்தப் பணியாளர்களை அப்படியே அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்கவேண்டும்.

   *வருவாயை எப்படி ஈடுகட்டுவது...?..உங்களின் கருத்துகளை எழுதுங்கள்.

2.நீர்நிலைகளைப் பராமரித்தல்

   *ஒவ்வொரு ஊரிலும் ஏற்கனவே இருந்த குளம்குட்டைகளைக் கண்டுபிடித்து,ஆக்கிரமிப்புகளை ஆண்மையோடு அகற்றிப் பாதுகாக்கவேண்டும்.

மரம் வளர்த்தலை, சமூக அமைப்புகளோடு சேர்ந்து அரசு முனைப்போடு செயல்படுத்த  வேண்டும்.

3.நதிகளை இணைத்தல் 

  *தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதற்கான அறிஞர்கள், பொறியாளர்கள்,சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள்.. அடங்கிய  குழுவை அமைத்து ,குறிகிய கால செயல்திட்டத்தைத் தீட்டி உடனடியாக செயல்படுத்தவேண்டும்.

4.ஊழல்,ஒழிய ...

    *அரசு அலுவலங்களில் தொடங்கி அனைத்து இடங்களிலும் வெளிப்படையான,ஊழலற்ற பணி நடைபெற  அனைத்து இடங்களிலும் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தவேண்டும்., இணைய வருகைப்  பதிவேடு..போன்ற மின் ஆளுமை வழிகளைப்   புகுத்தவேண்டும். 

 *அரசுக் கட்டடம் கட்டக்கூடிய, சாலைகள் அமைக்கக் கூடிய ஒப்பந்தக்காரர்கள்( பத்து ஆண்டுகளாவது..) அதில் பழுது ஏற்பட்டால் உடனடியாகச் சரிசெய்து தருமாறு நிற்பந்திக்கவேண்டும்.தவறு செய்பவர்களைச் சட்டப்படி தண்டிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை வழங்க வழிசெய்யவேண்டும்.

5.இலவசங்களை ஒழித்தல்

  *இலவசங்கள் கொடுப்பதற்குப் பதிலாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுக்கவேண்டும்.

6.கல்விமுறையில் மாற்றம்     

    *தாய்வழிக் கல்வியைக் கட்டாயமாக்குதல் 

   *அனைத்துக்கல்வி நிலையங்களையும் அரசுடமையாக்குதல் 

  *அதற்கு முதல் படியாக,மருத்துவ,பொறியியல் கல்லூரிகளை அரசுடமை ஆக்குதல் 

 *அனைத்துப் பள்ளிகளையும் இணையவழியில் இணைத்தல். தரமான ,சுகாதாரமான கட்டிடங்களை, கழிவறைகளை,ஆய்வகங்களை உடனடியாக அமைத்தல்.

  *கல்வியாளர்கள்,

உளவியல் வல்லுர்கள்,சமூகவியல் அறிஞர்கள் அகியோரைக்கொண்டு குழு அமைத்து கல்வி முறையிலும் தேர்வுமுறையிலும் மாற்றங்களைக் கொண்டுவருதல்.

(இதனைப் பற்றித் தனி கட்டுரையில் பார்ப்போம்)

7. அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துதல் 

8.மருத்துவ மனைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் முக்கிய சந்திப்புகளில் ..(இப்போது motel உள்ள இடங்களிலெல்லாம்..) மலிவுவிலை அரசு உணவகங்களை ஏற்படுத்துதல்.......

இப்படி ஏராளமான மாற்றங்களை ஒவ்வொரு துறையிலும் புதிய அரசு ...செயல் படுத்தினால்நாடு வளம் பெறுமே..!

****இது பற்றிய  கருத்துகளை வலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வோம்***************************************************

இவற்றையெல்லாம் இனி ஆளப்போகிறவர்களாவது  

செய்வார்களா..?செய்வார்களா..?

சொன்னதைச் செய்வார்களா..? சொல்லாததையும் செய்வார்களா..?

*உங்களின் ஆலோசனைகள் என்ன..?கருத்துகளைப் பகிருங்கள்..!

ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்போம்..!      

 

5 கருத்துகள்:

 1. தங்களின் நியாயமான ஆசைகள் நிறைவேறட்டும் நண்பரே
  ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத நிலையன்றோ தொடர்கிறது

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் கவிஞரே
  அறிவுப்பூர்வமான சிந்தனைகள், ஆக்கப்பூர்வமான விடயங்கள் இவைகளை எடுத்து நடத்த வேண்டியதற்கான முக்கியமான ஆணிவேர் மக்கள்தான் ஆனால் இன்றுவரை இது மக்களுக்கு விளங்கவில்லையே என்பதுதான் நமது துரதிஷ்டம்.

  பதிலளிநீக்கு
 3. ஆமாம் போங்க....அரசியல்வாதிகள் யாரும் சமூகத்திற்கு உழைப்பதற்காக வெல்வதில்லை...
  சுந்தர் ஐயா..இன்னும் பச்சப்புள்ளையா இருந்தா என்ன செய்வது..இந்த நாட்டின் நுரையீரல் கெட்டு குட்டிச்சுவராகி பலநாள் ஆச்சு...

  கேடுகெட்ட ,,கொள்கை விபச்சாரம் செய்யும் நாய்களின் பிடியிலிருந்து நாட்டை மீட்டாலெ போதும்....ஏசுவாய் நாம் நினைத்தால் யூதாஸாய் இருக்கிறான்..ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறு கன்னம் காட்டினால்..அவன் முதுகிலும் அடிக்கிறான்...

  புரட்டிப்போடவேண்டியிருக்கிறது அத்தனையையும்.

  உங்கள் கனவுகள் போலவே எனக்கும் இருந்தது...நடைமுறைகள் சரியில்லை..

  இன்னும் பல தேர்தல் வந்தாலும் மாறாது போலிருக்கிறது...

  நம்மால் முடிந்தது எழுதிக்கொண்டிருப்போம்...

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...