ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

வழக்குரை காதை .( பகுதி..3)..வழக்கு தொடர்கிறது...

நீதிமன்றத்தில் நுழைகிறோம்.. 

      சீற்றத்துடன் தலைவிரிகோலமாய், கண்ணீருடன், ஒற்றைச் சிலம்புடன் கோவேந்தன் மாளிகைக்குச் செல்லும் கண்ணகியைத் தொடர்ந்து, நாமும் அரசவைக்குப் போவோம்.

அரண்மனை வாயிலில் வயிற்காவலன் தடுக்கிறான். அரசப் புகழுரைகளை மட்டுமே கேட்டிருந்த அவன்,

  "அறிவறை  போகிய பொறியறு நெஞ்சத்து 

    இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!"    என்ற வசையுரையில் அதிர்ந்துவிடுகிறான். அவள் தோற்றம் அவனை

நடுங்கச்செய்கிறது.அரசனை வாழ்த்தும்போது,"பழியொடு படராப் பஞ்சவ வாழி!"என்று வாழ்த்துகிறான்.மறைமுகமாக இனி பழி வரப்போகிறது என உணர்த்துகிறான்.  மன்னனிடம் அவளின் அச்சமூட்டும் தோற்றம் பற்றி உரைக்கும் போதே ,அரசவைக்கு வரக்கூடிய தோற்றத்தில் அவள் வரவில்லை என்பதையும் சொல்லாமல் உணர்த்துகிறான். அரசன் அழைத்துவரச்சொல்ல கண்ணகி உள்நுழைகிறாள்.

"கோயில் மன்னனைக் குறுகினள்"என இளங்கோ காட்டுகிறார். அரச மரபின்படி சற்று இடைவெளிவிட்டு நிற்கவேண்டும் என்கிற மரபை மீறுகிறாள். மன்னன் அருகே சென்று நிற்கின்றாள்.

அல்லற்பட்டு அழுத கண்ணீர்கண்டு அஞ்சும் மன்னன் 

        அரசவையை அவமதிக்கும் தோற்றம்,அடங்காத சினம்..இவற்றையெல்லாம் கண்டு அஞ்சாத அரசன், "நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்"..என அவளின் கண்ணீர் கண்டு அஞ்சுகிறான்.

வழக்கறிக்கை (AFFIDAVIT)

     நீதிமன்ற மரபுப்படி, வழக்குத்தொடுப்பவர் நீதிபதியை,( my lord ) மரியாதைச் சொற்களால் விளிக்கவேண்டும். குடியாட்சிலேயே இப்படியென்றால், முடியாட்சியில்... ..?  கண்ணகி மன்னனை, "தேரா மன்னா" என விளித்து மரபை மீறுகிறாள். பின் தான் யார் என உரைக்கிறாள். இது இன்றைக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போர் தாக்கல் செய்யும் வழக்கறிக்கை ஆவணத்தின் வடிவத்தை ஒத்திருப்பது வியக்கவைக்கிறது.

   தான் பிறந்த ஊர், நாடு, கணவன் பெயர் (with intial), தொழில், மதுரை வந்த காரணம், கணவன் கொல்லப்பட்டமை, தன பெயர் என எல்லாவற்றையும் உறுதியாகப் பதிவு செய்கிறாள் கண்ணகி.

கண்ணகியின் வழக்குக்குக்காக நீதிமன்றம் நாளை ஒத்திவைக்கப்படுகிறது..  நாளை சிலம்பு உடையும்..

5 கருத்துகள்:

  1. துப்பறியும் சுந்தர்! கலக்கல்தான்... ஆய்வுக் கட்டுரை இவ்வளவு ஜனரஞ்சகமாக இருந்தால் பாமரரும் காவியம் படிக்க விரும்புவார்..இலக்கிய வாதி கலக்கியவாதியாகி அசத்துகிறீர்கள்...தொடருங்கள், தொடர்வேன் (குட்டிக் குட்டிப் பதிவு ஏனய்யா? சஸ்பென்ஸ் தாங்கலயே?)

    பதிலளிநீக்கு
  2. அட.. இன்னும் சிலம்ப உடைக்கலியா? என்னாச்சு சுந்தர்?
    உங்கள் ஆய்வென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திட வந்த எங்களை இப்படி ஏமாற்றலாமா? எங்கே சிலம்பு? உடைந்த சத்தம் கேட்டதே?! எப்போது விளக்கம் ? விரைவில் பதிவிடுக.. எதிர்பார்த்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. Arpudham Mahasundar Ayya! Parattamal iruka mudiyavillai. Arumaiyana vilakkam vasikum podhu kaatchiyaay neelgiradhu engal kangalil.

    பதிலளிநீக்கு
  4. சிலம்பு உடைவதை காண வருகிறேன்.....

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...