சனி, 26 செப்டம்பர், 2015

-வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி போட்டிக்கு எழுதப்பட்ட கவிதை -  

முயன்று வெல்வாய் ஞாலமதை! 

வெடித்துச் சிதறும் எரிமலைநீ!
     விரக்தி எதற்கு மானிடனே?
   அடித்து விரட்டு வேற்றுமையை!
        ஆணவம் எதற்கு மானிடனே!     
ஒடித்துப் போடு சாதியினை!
    உயர்த்து நல்ல நீதியினை!
  குடித்துக் குடித்துச் சீரழிந்தாய்!
        குடியை உயர்த்து ஆண்மகனே!



      படித்து உயர்த்து மொழியினையே!
          பண்பில் உயர்ந்த தமிழினையே!
    நடித்துக் கெடுக்கும் நரிகளினை
          நயமாய் ஏய்க்கும் பேய்களினை
       கடித்துக்    குதறு   புலியெனவே!
     களத்தில் காட்டு வீரமதை!
    முடித்து வைப்பாய் தீமைகளை!
         முயன்று வெல்வாய் ஞாலமதை!


தடைக ளேது நீயெழுந்தால்
       தவிடு பொடியாய் உடைபடுமே!
   விடைகள் எல்லாம் மிகவிரைவாய்! வியந்து வருமே உன்செயலால்!
 உடைக்க வேண்டும் கொடுமைகளை!   
   உரைக்க வேண்டும் உண்மைகளை!  
 படைக்க வேண்டும் புதுமைகளை!   
        பாரில் முற்றும் புதியனவாய்!           
        (அறுசீர் விருத்தம்)

 உறுதிமொழி:
இந்த  படைப்பு தமது சொந்தப் படைப்பே என்றும், இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்றும், “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்றும் உறுதி மொழி என்னால் வழங்கப்படுகிறது. 
                                                             - மகா சுந்தர்  

வெள்ளி, 2 ஜனவரி, 2015


வலை உலக உறவுகளுக்கு வணக்கம்.. 11.01.2015 அன்று மாலை 5.30க்கு நடக்கவிருக்கும் கவிஞர்.புதுகை வெற்றிவேலன் அவர்களின் கண்ணகி காவியம் நூல் வெளியீட்டு விழாவிற்கு இதனயே அழைப்பாக ஏற்றுக்கொண்டு விழாவிற்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி...

புதன், 17 டிசம்பர், 2014

பாரதி வாழ்க!

அறுசீர் விருத்தம் ( என்னுள் கவியார்வத்தைத் தூண்டிய 'ஊமைக்கனவுகள்'..ஜோசப் விஜூ அய்யாவிற்கு நன்றி..!)

          பாரதி வாழ்க! வாழ்க!

            
அடங்கிடாக் காளை யென்றே

             ஆர்ப்பரித் தெழுந்து சீறி 

         முடங்கியே கிடந்தி ருந்த 

             மொழியினைச் சிகரம் ஏற்றிச் 

         சடங்கினை முட்ட றுத்துச்

             சமமென வாழ்ந்து காட்டித் 

         தடம்தனைப் பதித்துச் சென்ற 

             தமிழ்க்கவி வாழ்க! வாழ்க!

வெள்ளி, 28 நவம்பர், 2014

GOOGLE என்னும் மாய உலகம்

        மாயப் படங்கள்

வலையுலக நண்பர்களே..வணக்கமுங்க..!.ஜாலியா ஒரு பதிவு.!.

google..என்கிற மாய உலகத்தில் நம்மை மிரளவைக்க,நம் புருவங்களை உயரவைக்க,எத்தனையோ அதிசயங்கள் இருக்கின்றன..!.

நான் ரசித்த சில படங்கள்..இதோ..

பார்த்துவிட்டு கமெண்ட் அடிங்கோ..! அது கவிதையாகவோ,நச்சுனு காமெண்டாகவோ இருக்கட்டும்..!.

உங்கள் கற்பனைக் குதிரையைப் பறக்க விடுங்க..!

செவ்வாய், 18 நவம்பர், 2014




கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் 'கம்பன் தமிழும் கணினித்தமிழும்'

ஒரு வாசகனின் பார்வையில்..

   "கிளிக்குப் பச்சைவண்ணம் தீட்டவேண்டுமா?"எனக் கேட்பார் அறிஞர் அண்ணா.கவிஞர் முத்துநிலவன் அவர்களின் பேச்சுக்கும் எழுத்துக்கும் 'மதிப்புரை'தேவையா? அவரின் பேச்சுக்கும்,எழுத்துக்கும் மயங்காதவர்கள் உண்டோ.?
பல்வேறு மாத,நாள் இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் வெளிவந்து,தமிழறிஞர்களின் மனதில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய பதினாறு கட்டுரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் முத்துநிலவன். கதை,கட்டுரை படிப்பதைப் போல,கட்டுரைகளைப் படிக்க முடியுமா.? அது படிப்போரின் உள்ளத்தைக் கவருமா?..முடியும் என நிரூபித்திருக்கிறார் முத்துநிலவன்.!அவரின் பரந்த வாசிப்பும்,ஆழமான மரபுப் பயிற்சியும்,புதியன கற்கும் ஆவலும்,அவரின் எழுத்துக்கு வலுவும் சுவையும் சேர்த்திருக்கின்றன.

செவ்வாய், 4 நவம்பர், 2014

இலக்கியப் புதிர்...

காதலுகாக மதம் மாறிய கவிஞன்.....!!!

"காதலுக்கு மதமுமில்லை;ஜாதியில்லையே
  கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே "என்ற கவியரசரின் பாடலை யாராலும் மறக்கமுடியாது. காதலுக்காக மதம் மாறுவது என்பது இன்றைக்குப் பெரிய விடயமல்ல. கி.பி பதினான்காம் நூற்றாண்டில் மதம் மாறுவது என்பதும் பெரிய செய்தியல்ல.கி.பி.ஏழாம் நூற்றாண்டிலேயே திருநாவுக்கரசர், சைவத்திலிருந்து சமணத்திற்கும் பின் சைவத்திற்கும் மாறியது அனைவர்க்கும் தெரிந்ததே..!
ஆனால்,காதலுக்காக ஒரு கவிஞர் மதம் மாறினார் என்பதுதான் அதிசயம்.!

புதன், 22 அக்டோபர், 2014

               வள்ளுவத்தாய்....

  (வலை உலக நண்பர்களுக்கு வணக்கம்!.. நீ...ண்ட இடைவெளிக்குப் பின் நம் இலக்கியச் சந்திப்பு தொடர்கிறது.. 2009இல் நான் எழுதி, காஞ்சிபுரம் மாவட்டம், உலகத் திருக்குறள் பேரவை வெளியிட்ட திருக்குறள்- வாழ்வியல் ஓவியம் என்ற  நூலில் வெளிவந்த கட்டுரையைச் சில மாற்றங்களுடன் வெளியிடுகிறேன்..)
   
                 தீப ஒளித் திருநாளில் வழிகாட்டும் ஒளி விளக்காய்த் திகழும் வள்ளுவம் பற்றிச் சிந்திப்போம்.. வள்ளுவனை, "தெய்வ

வள்ளுவன் வான்மறை தந்ததும்" என பாரதி பாடியதைப் போலத் 'தெய்வம்' என்பதா? நல்லன சொல்லியும் அல்லனவிலக்கியும் வழி காட்டுவதால் 'ஆசிரியர்' என்பதா?...உணர்வுகளின்,உறவுகளின் உச்சமாக இருக்கிற 'தாய்' என்பதா? 
தெய்வ நம்பிக்கை எல்லோருக்கும் இருப்பதில்லை.வாழ்வின் முற்பகுதியில் ஆசிரியர்களின் தேவை அவசியம் என்றாலும்,பிற்பகுதியில் (40வயதிற்குப் பின்) ஆசிரியர் நேரடியாக வாழ்க்கையைப் பாதிப்பதில்லை.
Related Posts Plugin for WordPress, Blogger...