புதன், 30 மார்ச், 2016
செவ்வாய், 22 மார்ச், 2016
கதை.2.எது கல்வி?
எது கல்வி ?
தேர்வுக் காலம் இது. மாணவக் கண்மணிகளுக்குச் சோதனையான காலம். வினாக்களின் வெப்பம் தாங்கமுடியாமல், கருகிவிட்ட மலர்களின் சோகக் கதைகள் சொல்லிமாளாதவை!
எது கல்வி? எப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்க வேண்டும்?..இதோ கதை..2
குரு தம்மிடம் படித்த மூன்று மாணவர்களுக்கு வாழ்த்துக்கூறி விடையளித்தார். நிறைவாக ஒரு தேர்வு வைத்தார். மூன்று மாணவர்களுக்கும் தனித்தனியாக ஒரே அளவுள்ள மூன்று பாறைகள் காட்டப்பட்டன.
திங்கள், 14 மார்ச், 2016
கதை சொல்லப்போறேன்...
வலையுலக உறவுகளுக்கு வணக்கம்..எண்ணப்பறவை..நீண்ண்ண்ட...நாட்களாக வலைக்காட்டில் பறக்கவில்லை....இனி அவ்வப்போது...தன சிறகை மெல்ல விரித்துப் பறக்கும்.
(...இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது...என்னவென்றால்...இனி இந்தப் பறவை வாரம் ஒரு கதை சொல்லப் போகுது....டமடமடமடம.....)
வியாழன், 31 டிசம்பர், 2015
வடம் பிடிப்போம்! வள்ளுவத் தேரை!
வடம்பிடிப்போம்!வள்ளுவத் தேரை!
ஓர்நாட்டு மாந்தருக்காய்ப் பாட வில்லை!
உலகத்தின் உயர்வுக்காய் எண்ணிச் செய்தான்!
கார்பொழியும் மேகமென காற்றைப் போல
காலமது உள்ளமட்டும் மனிதம் வாழ!
வேரெனவே ஊன்றிவிட்டான் புனிதம் காக்க!
வெகுண்டெழுந்தான் புவியிலுள்ள கயமை மாய்க்க!
ஊர்க்கூடித் தேரிழுப்போம் வாரீர்! வாரீர்!
உலககெங்கும் பொதுமறையின் புகழைக் காக்க!
புதன், 16 டிசம்பர், 2015
பாட்டுப் பொறுக்கிகளுக்குப் பாடம் நடத்திடுவோம்!
பாட்டுப் பொறுக்கிகளுக்குப்
பாடம் நடத்திடுவோம்!
வீட்டிலுள்ள நாய்கூட
விட்டெறிந்தால் நக்கிவிட்டு
காட்டிவிடும்
நன்றியதை!
காவலனாய்ச் சுற்றிவரும்!
காட்டுமிரு கம்போல
கேடுகெட்டப் பேடியவன்
பாட்டுப்பொ றுக்கியென
பண்பாட்டில் தீவைத்தான்
திங்கள், 23 நவம்பர், 2015
வியாழன், 19 நவம்பர், 2015
வருக! கவியரசர் புகழ்பருக !
வருக! கவியரசர் புகழ்பருக !
அள்ளஅள்ளக் குறையாத
அமுதமெனத் திருக்குறளால்
தெள்ளெனவே வழிசொன்னான்
திறம்படைத்த தேவனவன்!
செங்கரும்புச் சாறெடுத்துச்
சந்தமிகு கவிசெய்தான்
தங்கமென வந்திட்ட
தமிழ்க்கவிஞன் கம்பனவன்!
அள்ளஅள்ளக் குறையாத
அமுதமெனத் திருக்குறளால்
தெள்ளெனவே வழிசொன்னான்
திறம்படைத்த தேவனவன்!
செங்கரும்புச் சாறெடுத்துச்
சந்தமிகு கவிசெய்தான்
தங்கமென வந்திட்ட
தமிழ்க்கவிஞன் கம்பனவன்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

