ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016
வழக்குரை காதை .( பகுதி..2)..வழக்கு தொடர்கிறது...
ஏன் பாண்டியன் அப்படிச் செய்தான்..?
பொற்கொல்லன் சொல்லையே உறுதியாக ஏற்று பாண்டியன் கோவலனைத் தண்டித்தது ஏன்.? "வினை விளை காலம்"..அதாவது விதி என்கிறார் இளங்கோ. நுட்பமாகப் பார்த்தால், இளங்கோ என்ற சமணத்துறவிக்கும், ஆளுமைமிக்க கவிஞருக்கும் இடையே உள் நடக்கும் மோதல், காப்பியம் முழுமைக்கும் எதிரொலிக்கிறது. எங்கெல்லாம் கதைப் போக்கில் திருப்பம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம்,சமணத்தின் அடிநாதமான 'ஊழ்' வெளிப்பட்டுக் கதையை இயக்குகிறது.அதையும் தாண்டி கவிஞனின் ஆளுமை, சமணக் கோட்பாடுகளை மீறி பெண்மையை உயர்த்துகிறது; புரட்சி செய்யவைக்கிறது.
சிலம்புச் சோலை ..வழக்குரை காதை -ஒரு மீள்பார்வை (பகுதி 1)
சிலம்புச் சோலை
..வழக்குரை காதை..... உடைத்து வெளிவரும் உண்மைகள் ... (பகுதி..1)
முன்னுரை
சங்க காலத்தில் தனிப் பாடல்களில் தவமிருந்த அன்னைத் தமிழை, காவிய மாளிகையில் தனிப்பெரும் பேரரசியாக அமரவைத்த பெருமை இளங்கோவடிகளையே சாரும்!.அன்றைய தமிழ்ச் சமுதாய அரசியலை, கலையுணர்வோடு இயைந்த வாழ்வை, அறவாழ்வின் நாட்டத்தை நாம் அறியத்தரும் காப்பியம் சிலப்பதிகாரம். ஆங்கில அறிஞர் டிக்கென்ஸ்,THE TALE OF TWO CITIES' என்று ஒரு நூல் எழுதியிருப்பார்.ஆனால் ,அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மூன்று நகரங்களின் கதையை ( முப்பது காதைகள் வழியே) தந்தவர் நம் இளங்கோ. முப்பது காதைகளில் காவியத்தின் இதயமாக இருப்பது 'வழக்குரை காதை'ஆகும். இருபதாவது காதையான ' வழக்குரை காதை'பற்றி இங்கு காண்போம்.
வியாழன், 7 ஏப்ரல், 2016
என்ன செய்ய வேண்டும் புதிய அரசு?!
என்ன செய்ய வேண்டும் புதிய அரசு?!
தேர்தல் களம் அனல் பறக்கிறது! தனிமனிதச் சாடல்களும்,தனக்கு இணங்காத அணியைச் சீர்குலைக்கும் ராஜ தந்திரங்களும்?!! எதேச்சாதிகாரங்களும் ,கட்சிகளுக்குள்ளே நடக்க இருக்கும் உள்குத்து அநாகரீகங்களும் இன்னும் பரபரப்பான தலைப்புச் செய்திகளாகி ஊடங்களுக்குத் தீனி போடும்!...போகப்போக அரசியல் வானில் வறண்ட வானிலையே காணப்படும்.!
ஆட்சி அமைக்கப் போவது யார்?..எந்தக்கூட்டணி..!? இந்தக் கேள்விக்கு மே 16க்குப் பிறகே விடை தெரியும்.
வரப்போகிற ஆட்சி என்ன செய்ய வேண்டும்..? அது ஆண்டுகொண்டிருக்கிற, ஏற்கனவே ஆண்ட, அல்லது புதிய கூட்டணிகள்...எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும்..! இனியாவது தமிழகம் உருப்பட என்ன செய்ய வேண்டும்..?..அனைவரும் இந்த இலக்கை நோக்கிச் சிந்திப்போம்!
புதன், 30 மார்ச், 2016
அலையும் குரல்களில் அதிரும் உணர்வுகள் { நூல் விமர்சனம் }
அலையும் குரல்கள்-நூல் மதிப்புரை
ஒவ்வொரு காலத்திலும் ஏதேனும் ஒரு பிரச்சனை மையம் கொண்டு, தமிழகத்தைப் பரபரப்பாக்கும். ஹிந்தி எதிர்ப்பும்,ராஜீவ்காந்தி படுகொலையும்,ஈழ இனப் படுகொலையும் தமிழகத்தில் அவ்வப்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.இன்று மது எதிர்ப்பு மையம் கொண்டு அரசியலிலும்,சமூகவியலிலும் மாற்றங்களுக்கான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மிகையல்ல!.அய்யா சசிபெருமாளின் இறப்பு,நந்தினி போன்ற மாணவர்களின் தொடர் போராட்டங்கள்,அரசியல் வாக்குறுதிகள் போன்றன மது ஒழிப்புக்கான போரை வேகப்படுத்தியிருக்கின்றன!.அந்த யுத்த களத்திற்கான கூர்வாளாக 'அலையும் குரல்கள்'கவனம் பெறுகிறது!
செவ்வாய், 22 மார்ச், 2016
கதை.2.எது கல்வி?
எது கல்வி ?
தேர்வுக் காலம் இது. மாணவக் கண்மணிகளுக்குச் சோதனையான காலம். வினாக்களின் வெப்பம் தாங்கமுடியாமல், கருகிவிட்ட மலர்களின் சோகக் கதைகள் சொல்லிமாளாதவை!
எது கல்வி? எப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்க வேண்டும்?..இதோ கதை..2
குரு தம்மிடம் படித்த மூன்று மாணவர்களுக்கு வாழ்த்துக்கூறி விடையளித்தார். நிறைவாக ஒரு தேர்வு வைத்தார். மூன்று மாணவர்களுக்கும் தனித்தனியாக ஒரே அளவுள்ள மூன்று பாறைகள் காட்டப்பட்டன.
திங்கள், 14 மார்ச், 2016
கதை சொல்லப்போறேன்...
வலையுலக உறவுகளுக்கு வணக்கம்..எண்ணப்பறவை..நீண்ண்ண்ட...நாட்களாக வலைக்காட்டில் பறக்கவில்லை....இனி அவ்வப்போது...தன சிறகை மெல்ல விரித்துப் பறக்கும்.
(...இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது...என்னவென்றால்...இனி இந்தப் பறவை வாரம் ஒரு கதை சொல்லப் போகுது....டமடமடமடம.....)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
